பவுலர் ஆனார் தோனி!

வெள்ளி, 22 ஜூலை 2011 (18:35 IST)
லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங் பேடை திராவிடிடம் கொடுத்து விட்டு இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்து வீசி வருகிறார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு கிட்டத்தட்ட தோனி, பீட்டர்சன் விக்கெட்டைக் கைப்பற்றியிருப்பார்.

அபாரமான இன்ஸ்விங்கரை வீசிய தோனியின் அந்தப் பந்தை பீட்டர்சன் தடுத்தாட முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டது போல் இருந்தது. திராவிட் கேட்சைப் பிடித்து விட்டார். நடுவர் பில்லி பவுடனும் அவுட் கொடுத்து விட்டார்.

ஆனால் நடுவர் தீர்ப்பை எல்.பி.டபிள்யூ. அல்லாத விஷயங்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் என்ற முறை இருப்பதால் பீட்டர்சன் உடனே மேல் முறையீடு செய்தார். அது அவுட் என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் பில்லி பௌடன் தீர்ப்பை மாற்றி எழுதினார்.

பந்து கடக்கும்போது பீட்டர்சனின் மட்டை அவரது பேடை லேசாக உரசியதால் எழுந்த சத்தத்தினால் பில்லி அதனை அவுட் என்று கருதினார்.

இங்கிலாந்து தற்போது 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்