நடிகையை திருமணம் செய்யமாட்டேன் - ரெய்னா

புதன், 2 மே 2012 (18:09 IST)
FILE
ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து கிசுக்கப்பட்ட நிலையில் இந்திய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மெனுமான சுரேஷ் ரெய்னா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

"நான் இப்போதே திருமணம் செய்ய விரும்பவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்வேன். ஆனால் பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய மாட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

எனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. இதனால் என்னையும், எனது குடும்பத்தாரையும் புரிந்து கொள்ளக்கூடிய பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதில் பெருமை அடைகிறேன். சென்னை அணியில் சிறந்த கேப்டன், பயிற்சியாளர் உள்ளனர். உள்ளூர் வீரர்களான அஸ்வின், பத்ரிநாத், தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானம் எனக்கு பிடித்தது.

5 ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணியில் விளையாடி வருகிறேன். இதனால் தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். மைதான ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியில் பேசுகிறேன்.

இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்