தமீம் 50 நிற்கிறார்; வங்கதேசம் 68/2

வியாழன், 22 மார்ச் 2012 (19:01 IST)
237 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தி வரும் வங்கதேசம் சற்று முன் வரை 18வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

தமீம் இக்பால் அபாரமாக ஆடி வருகிறார். அவர் 50 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நிற்கிறார்.

துவக்க விக்கெட்டுக்காக தமீமும், நஜிமுதீனும் இணைந்து 68 ரன்க்ளைச் சேர்த்தனர். ஆனால் நஜிமுதீனுக்கு ஒன்றும் மாட்டவில்லை 52 பந்துகளை சந்தித்து அவர் 16 ரன்களை எடுத்தீருந்தபோது அப்ரீடி பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க அதனை மிட் ஆஃபிலிருந்து 15, 20 அடிகள் வேகமாக ஓடி வந்து கடைசியில் டைவ் அடித்து அபார கேட்சைப் பிடித்தார் யூனிஸ் கான்.

ஜஹ்ருல் இஸ்லாம் களமிறங்கியவுடன் சயீத் அஜ்மலை எதிர்கொள்ள வேன்டியிருந்தது.அஜ்மலின் 5 பந்துகளில் நரக வேதனையை அனுபவித்த அவர் கடைசியில் தூஸ்ரா பந்து ஒன்று அவரது மட்டை விளிம்பை அவருக்குத் தெரியாமலேயே தட்டிச் செல்ல மீண்டும் கவனமாக் இருந்த யூனிஸ் கான் கேட்சைப் பிடித்தார்.

தற்போது தமீமும் மின்னல் ஃபீல்டர் நசீர் ஹொசைனும் விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்