சா‌ர்ஜ‌ர்‌ஸை வீழ்த்தியது நை‌ட் ரை‌ட‌‌ர்‌ஸ்

புதன், 4 மே 2011 (08:48 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியி‌ன் டெ‌‌க்கா‌ன் சா‌ர்ஜ‌ர்‌ஸ் ‌அ‌ணியை 20 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் கொ‌ல்க‌த்தா நை‌ட் ரைட‌ர்‌ஸ் அ‌ணி தோ‌ற்கடி‌த்தது.

ைதராபாத்தில் நே‌ற்‌றிரவு நடந்த ஆட்டத்தில் ுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக யூசுப் பதான் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் குவித்தார்.

அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான்-ரவி தேஜா இணை 5வது விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது.

கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்டபோது, 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களே எடுத்தது. தேஜா 17வது ஓவரிலும், தவான் 18வது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.

தவான் 45 ப‌ந்‌தில‌் 54 ரன்கள் எடுத்தார். ரவி தேஜா (30), சோஹல் (26), ஒயிட் (13) ஆ‌கியோ‌ர் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

இதையடுத்து கொல்கத்தா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்