சசெக்ஸ் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வெள்ளி, 26 ஜூன் 2009 (12:50 IST)
ஹோவில் நடைபெறும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்ஸை 349/7 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. மீண்டும் ஆடிய சசெக்ஸ் அணி தன் முதல் இன்னிங்ஸில் சற்றே விரைவு ரன் குவிப்பில் ஈடுபட்டு 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சசெக்ஸ் அணியில் நேஷ் 45 ரன்களையும், ஏ.ஜே. ஹாட் 40 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்துள்ளனர்.

138/5 என்று சரியும் நிலையிலிருந்த சசெக்ஸ் அணியை அதன் பின்வரிசை வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 311 ரன்களை எட்டச் செய்தனர்.

38 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்ட்ரேலியா நேற்றைய ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணி கவலைப் பட வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் உதிரிகள் வகையில் அவர்கள் 40 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். இதில் பை வகையில் 11 ரன்கள், நோ-பால் வகையில் 22 ரன்கள் என்பது ஆபத்தான போக்காகும்.

பிரட் லீ, ஸ்டூவர்ட் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், பீட்டர் சிடில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்