கொழும்பு டெஸ்ட்: இலங்கை-164/3

ஞாயிறு, 12 ஜூலை 2009 (18:15 IST)
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் சோயப் மாலிக் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் துவங்கிய இலங்கை வீரர்கள் எந்தவித நெருக்குதலும் இன்றி நிதானமாக ரன் சேகரித்தனர். துவக்க வீரர்கள் வர்ணபுரா 11 ரன்கள், பரனவிதனா 26 ரன்கள் எடுத்தனர். ஜெயவர்த்தனே 19 ரன்னில் வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சங்கக்காரா அபாரமாக விளையாடி 81 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மறுமுனையில் சமரவீரா 13 ரன்களுடன் உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்