கால்லே டெஸ்ட்: பாகிஸ்தான் 48/5

சனி, 23 ஜூன் 2012 (18:18 IST)
கால்லேயில் நடைபெறும் பாகிஸ்தான், இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 48 ரன்களை மட்டுமே எடுத்து பாலோ ஆனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக இலங்கை தனது முதல் இன்னிங்சில் தில்ஷான் 101, மற்றும் சங்கக்காரா 199 நாட் அவுட் ஆகியவற்றால் 472 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 24 ஓவர்களை தக்குப்பிடிக்க நேரிட்டது. ஆனால் இதில் 5 வீரர்கள் ஆட்டமிழந்துள்ளனர்.

முதலில் டபீக் உமர் 9 ரன்கள் எடுத்து குலசேகராவின் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி ஆகி வெளியேறினார்.

அடுத்த பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. அசர் அலி குலசேகராவின் அபாரமான அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு 16 ஓவர்கள் விக்கெட் விழவில்லை ரன் அடிக்கும் எண்ணமும் இல்லாமல் சென்றது. துவக்க வீரர் ஹபீஸ் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆப் ஸ்பின்னர் ரந்திவ் வீசிய பந்து நேராக வர முன்னால் வந்து ஆடாமல் நின்ற இடத்திலிருந்தே ஆட முயல பந்து நேராக பேடைத் தாக்கியது. அவுட்.

பிறகு அடுத்த பந்தே இரவுக்காவலனாக சயீத் அஜ்மல் களமிறங்கினார். ஆனால் அவர் எழும்பிய ஆப் பிரேக் பந்தை உடம்பால் ஆடினார் பந்து ஷாட் லெக்கில் பிடிக்கப்பட கேட்ச் என்று முறையீடு செய்தனர், நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். மோசமான நடுவர் தீர்ப்பு இது!

சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் ஒரு 0. இந்த முறை ஆசாத் ஷபிக், பவுலர் ஹெராத் ஒரு இடது கை ஆப் ஸ்பின்னை வீச பந்து ஷபீக்கின் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

யூனிஸ் கான் 15 ரன்களுடனும், அயுப் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் ரந்தீவ், குலசேகரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்