கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா தோல்வி!

திங்கள், 1 ஜூலை 2013 (08:47 IST)
FILE
கிங்ஸ்டனில் நேற்று நடபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இரண்டாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அனியிடம் இந்தியா தோல்வி தழுவியது. கடைசி ஒரு விக்கெட்டை இந்தியாவால் வீழ்த்த முடியாமல் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி தழுவியது.

அவர்கள் அணியில் கேப்டன் பிராவோ காயம் காரணமாக விளையாட முடியாது போக இந்திய அணியில் தோனி பேட் செய்த போது காயமடைந்ததால் பீல்டிங்கில் இறங்க முடியவில்லை.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்தியா துவக்க சரிவிற்குப் பிறகு ஓரளவு மீண்டு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் 47.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வி மூலம் இந்திஅய தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வென்று சென்று கொண்டிருந்தது முடிவுக்கு வந்தது.

கடைசியில் டினோ பெஸ்ட், கிமார் ரோச், 4.2 ஓவர்கள் நின்று தேவையான 10 ரன்களை எடுத்தனர். இந்தியா கடும் நெருக்கடி கொடுத்தும் அவர்கள் நரம்புகள் பலமானதாக இருந்ததால் நின்று வென்றனர்.

மேற்கிந்திய தீவுகளின் 9 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் ஒன்று பவுண்டரி அடித்த பிறகு அலட்ச்டிய்த்தினால் விழுந்தது. அல்லது பெரிய ஷாட் அடிக்க சென்று விழுந்தது என்றே கூறவேண்டும். 9 விக்கெட்டுகள் என்றவுடன் துணைக் கேப்டன் கோலி கடும் நெருக்கடி கொடுத்தார், பேட்டை சுற்றி பீல்டர்களைப் போட்டு பயமுறுத்தினார். ஆனாலும் வெற்றி கிட்டவில்லை.

மேற்கிந்திய அணியில் அதிக பட்சமாக 97 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்ட சார்லஸ் ஒருமுறை அஷ்வின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார். ஆனால் பந்து சிக்கவில்லை தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் அவரது கிளவ்விலும் பந்து சிக்கவில்லை. தோனி இருந்திருந்தால் அது அவுட். மேற்கிந்திய அணியும் தோல்வி தழுவியிருக்கும்.

தினேஷ் கார்த்திக் கோட்டைவிட்ட ஸ்டம்பிங்கினால் தோல்வி:

198/8 என்று ஆகியிருக்கவேண்டிய நிலையில் தினேஷ் காத்திக் ஸ்டம்பிங்கையும் கோட்டை விட்டு பவுண்டரியையும் கொடுத்ததால் நெருக்கடி குறைந்தது. அது எட்ஜா என்று தெரியவில்லை. ஆனல் ஸ்டம்பிங் என்றால் அல்லது பேட்டில் பட்டிருந்தால் சார்லஸ் ரன் அவுட். ஆனால் அவர் நீண்ட தூரம் இறங்கி வந்து பந்தை கோட்டை விட்டதை தினேஷ் கார்த்திக் அவுட் ஆக மாற்றவில்லை!

முன்னதாக உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் அபாரமாக வீசினர். கெய்ல் (11), ஸ்மித் (0) சாமியெல்ஸ் (1) ஆகியோர் விரைவில் பெவிலியனுக்கு நடையக் கட்ட மேற்கிந்திய தீவுகள் 26/3 என்று மோசமாகத் துவங்கியது.

அதன் பிறகு டேரன் பிராவோ (55), சார்லஸ் இணைந்து ஸ்கோரை 28வது ஓவரில் 142ற்கு உயர்த்தினர் அப்போது பிராவோ அஷ்வினிடம் வீழ்ந்தார். பிறகு சாமி மட்டுமே 29 ரன்கள் எடுத்தார் ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தன. இஷாந்த், அஷ்வின், ரெய்னா தங்களிடையெ 5 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். 220/9 என்ற நிலையிலிருந்து 4 ஓவர்கள் போராடி டினோ பெஸ்ட், ரோச் ஆகியோர் வெற்றி பெற்றுத் தனதனர்.

முன்னதாக இந்தியா பேட் செய்தபோது ஷிகர் தவான் அருமையான ஹூக் ஷாட் ஒரு பளார் கவர்டிரைவுடன் 11 ரன்கள் எடுத்து நன்றாகவே விளையாடி வந்தார். ஆனால் ரோச் பந்தை திடீரென மேலேறி வந்து அடிக்க முயன்று அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

கோலி களமிறங்கி டினோ பெஸ்டின் 150 கிமீ வேக பவுன்சரை நம்ப முடியாத விதத்தில் தேர்ட் மேன் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து தொடங்கினார். ஆனால் டேரன் சாமி போன்ற பூப்பந்து போடுபவரிடம் விக்கெட்டை கொடுத்து 11 ரன்களில் வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக், ரோகித் ஆடும்போது ரன் விக்திதம் கட்டுப்படுத்தப்பட்டது. 16 ஓவர்களில் 59 ரன்களையே சேர்த்தனர். 25.3 ஓவர்களில் 98 ரன்கள் ஸ்கோர் வந்தபோது 56 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 89 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிகருடன் 60 ரன்கள் எடுத்து மீண்டும் சொத்தை சாமியிடம் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினார். அயல்நாட்டில் இந்த இன்னிங்ஸ் சிறபாக அமையும் என்று நினைத்தபோது 44 (55 பந்துகளில்) ரன்களில் அவர் வைடு பந்தை துரத்தி ரோச் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனி 27 ரன்கள் எடுத்து கடைசியில் வெளுத்துக் கட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது டினோ பெஸ்ட் பந்தில் பவுல்டு ஆனார். ஆகவே ரோகித், ரெய்னா, தோனி, கார்த்திக் தவிர பேட்டிங் ஒரு போராட்டமாகவே அமைந்தது.

இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 43 ரன்களுக்குக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேற்று இந்தியா வெற்றி பெறாததற்கு மற்றொரு காரணம் மேன் வித் கோல்டன் ஆர்ம் ரவீந்தர் ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ரெய்னா 3 ஓவர்களில் 4 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ரெய்னா மட்டும் நேற்று ஒரு 60- 70 ரன்களை எடுத்திருந்தால் இந்தியா சுலபமாக வென்று இருக்கும். ஜடேஜா சோபிக்காததும் ஒரு காரணம், அனைத்திற்கும் மேலாக தோனி களமிறங்க முடியாமல் போனது பெரும் பின்னடைவகா முடிந்தது.

ஆட்டநாயகன் சார்லஸ். நாளை இந்தியா இலங்கையை மற்றொரு போட்டியில் எதிர்கொள்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்