ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியா 2-வது இடம்

செவ்வாய், 5 ஏப்ரல் 2011 (11:09 IST)
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியபோதும் 128 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்ற இலங்கை அணி 118 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் முறையே 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ், இலங்கையின் தில்ஷான், சங்ககரா, இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

இந்திய வீரர் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்திலும், சச்சின் 9-வது இடத்திலும், கம்பீர் 10-வது இடத்திலும், யுவராஜ் 17-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலிடத்திலும், ஜிம்பாப்வே வீரர் பிரைஸ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்வான் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 18-வது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி 3-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் 4-வது இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்