இருபது-20: ஆஸ்ட்ரேலிய அணித்தலைவராக கிளார்க் நியமனம்

வெள்ளி, 16 அக்டோபர் 2009 (15:46 IST)
ஆஸ்ட்ரேலிய இருபது-20 அணியின் தலைவராக மைக்கேல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் கேமரூன் வொய்ட் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய கிளார்க், “ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து தாம் நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். அவரது வழியைப் பின்பற்றி நடப்பேன். இருபது-20 அணியை வழிநடத்திச் செல்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறத” என்றார்.

வெஸ்ட்இண்டீஸில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி இருபது-20 உலகக்கோப்பை தொடரை வெல்வதே எங்களின் இலக்கு. ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளதால் இது சாத்தியமாகும் என நம்புகிறேன் என்றும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இருபது-20 போட்டிகளில் இருந்து ஆஸ்ட்ரேலிய ஒருநாள், டெஸ்ட் அணியின் தலைவர் பாண்டிங் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்