இந்தியா திணறல் 60/3 (16)

வியாழன், 3 ஜனவரி 2013 (17:43 IST)
FILE
கொல்கட்டா ஒருநாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. 34 ஓவர்களில் ஓவருக்கு 5.61 என்ற ரன் விகிதத்தில் இந்தியா ரன் எடுக்கவேண்டும்.

துவக்கத்தில் ஜுனைத் கான், 7 அடி ஒரு அங்குலம் மொகமட் இர்பான் கம்பீரையும், சேவாகையும் பராத பாடு படுத்தினர். குறிப்பாக சேவாகை ஜுனைத் கான் ஆட்டிப்படைத்தார்.

ஆனாலும் அவர் 3 அழகான பவுணடரிகளை அடித்தார். தொடர்ந்து இந்தியாவுக்கு பிரஷர் கொடுத்தனர் பாகிஸ்தான் வீச்சாளர்கள். முதலில் கம்பீர் 11 ரன்கள் எடுத்து திணறித் திணறி ஆடி கடைசியில் பவுண்டரி அடிக்கவேண்டிய பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு ஜுனைத் கான் பந்தில் பவுல்டு ஆனார்.

வீரர்த் கோலி 6 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் லெக் திசையில் சென்ற ஜுனைத் கான் பந்தை தொட்டு கம்ரன் அக்மலின் அபாரமான பறத்தல் கேட்சிற்கு வெளியேறினார். பந்து பவுன்ஸ் அதிகம் விட்டிருந்தால் வைடு பந்து அது. தேவையில்லாமல் அவுட் ஆனார்.

சேவாக் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தடுப்பாட்டத்தை கண்டுபிடித்து கொண்டு ஓரளவுக்கு திணறாமல் ஆடி வந்தபோது உமர் குல் வீசிய அபாரமான இன்ஸ்விங்கருக்கு நேராக காலில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார்.

ஜுனைத் கான் மீண்டும் அச்சுறுத்தும் விதத்தில் வீசி 7 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தற்போது யுவ்ராஜ் 5 ரன்களுடனும், ரெய்னா 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்