இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் போடக்கூடாது - நியூசீ. பயிற்சியாளர்!

செவ்வாய், 24 டிசம்பர் 2013 (18:31 IST)
FILE
வரும் ஜனவரி 2014-இல் இந்திய கிரிக்கெட் அணி நியூசீலாந்துக்குச் சென்று 2 டெஸ்ட்போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச்களை அமைக்கக்கூடாது, 'பந்துகள் தாறுமாறாக எழும்பும், ஸ்விங், ஆகும் பசுந்தரை பிட்ச் போடுவதுதான் சிறந்தது' என்று நியூசீலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்தியாவுக்கு நியூசீலாந்து அணி செல்லும்போது அவர்கள் நமக்கு எந்த விதமான சாதக பிட்சையும் போடுவதில்லை. போட்டிக்கு முதல்நாளே பிட்சை ஸ்பின் பிட்சாக மாற்றுகிறார்கள்.

ஆகவே நாமும் பசுந்தரை பிட்ச்களைப் போடவேண்டும் என்கிறார் ஹெசன்.

நாம் அங்கு செல்லும்போது நமக்கு சாதகங்கள் கிடைப்பதில்லை, நாம் மட்டும் ஏன் இந்தியர்களுக்கு ...

சாதகமாக பிட்ச் போடவேண்டும், எனவே பசுந்தரை இல்லாது வறண்ட பிட்சைப் போட்டால் நான் உண்மையில் கடும் ஏமாற்றமடைவேன். என்கிறார் ஹெசன்.

நியூசீலாந்தில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. பிறகு 2 டெஸ்ட் போட்டிகள் ஈடன் பார்க்கிலும், பேசின் ரிசர்விலும் நடைபெறுகிறது.

2009ஆம் ஆண்டு இந்தியா நியூசீலாந்து சென்றபோது தொடரை 1- 0 என்று வென்றது. குறிப்பாக ஹேமில்டன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதைத்தான் இப்போது பயிற்சியாளர் மைக் ஹெசன் 'சாதகம்' செய்துவிட்டதாக சாடியுள்ளார்.

தூசித் தும்பட்டைப்பிட்சை போட்டு இங்கிலாந்திடம் இந்தியா சொந்த நாட்டில் உதை வாங்கியதுபோல் பசுந்தரை போட்டு நியூசீலாந்து உதை வாங்க எண்ணம் கொண்டிருந்தால் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்?

வெப்துனியாவைப் படிக்கவும்