அக்தருக்கு 5 ஆண்டு தடை!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (20:34 IST)
நன்னடத்தை விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்டதால், சர்வதேச கிரிக்கெடபோட்டிகளில் விளையாட வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் '20-20' போட்டிகள் துவங்க இருந்நிலையில், சக வீரரான முகமது ஆசிப்பை மட்டையால் தாக்கியதற்காக அக்தருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்தும், குற்றச்சாட்டுகளை சுமத்தியும் பேசியதற்காக ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் ஆஜரானர் சோயிப் அக்தர் (32).

அதனையடுத்து, வாரியத்திற்கஅவப்பெயர் ஏற்படும் வகையில் பேசியதற்காக அக்தருக்கு மேலும் ஐந்தாண்டு கால தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது.

"சோயிபஅக்தர் மீதான நம்பிக்கையை கிரிக்கெட் வாரியம் இழந்துவிட்டது. அவரது செயல்பாடு பாகிஸ்தான் அணிக்கும், வாரியத்திற்கும், சக வீரர்களுக்கும் கலங்கும் விளைவிப்பதாக உள்ளது" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நசிம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அக்தருக்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்தமாதம் துவங்க உள்ள இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட அக்தருக்கு தடை இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்