ஆலன் பார்டர்

உலக கிரிக்கெட் வீரர்களில் சவாலும், மன உறுதியிஉம் நிறைந்தவர் என்று அழைக்கப்படும் ஆஸ்ட்ரேலியாவின் ஆலன் பார்டர் 1955ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் (ஜூலை 27) பிறந்தார்.

கெர்ரி பேக்கரின் உலக தொடர் கிரிக்கெட் காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1983- 84 ஆம் ஆண்டுகளில் டிரினிடாட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 98 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்களையும் அடித்தது பார்டரின் அப்போதைய சிறந்த ஆட்டமாகும்.

தோல்வியினால் துவண்ட ஆஸ்ட்ரேலிய அணியை தன் சிறப்பான வழி நடத்தலாம் 1987 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் உலக கோப்பையை வெல்லச் செய்தார். பிறகு 1989 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்ற போது ஆஸ்ட்ரேலியாவின் சிறந்த கேப்டன் என்ற பெருமையை எட்டினார்.

அவரது 15ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் அதிக டெஸ்ட் (156) போட்டிகளுக்கான சாதனை, அதிக டெஸ்ட் ரன்கள் (11,174) சாதனை, டெஸ்ட் கேட்ச்கள் (156) சாதனை, தொடர்ச்சியாக அதிக டெஸ்ட்கள் (153) சாதனை, அதிகட் டெஸ்ட்கள் (93) கேப்டனாக இருந்த சாதனை என்று சாதனை மன்னனாக திகழ்ந்தார்.

இவற்றில் கடைசி இரண்டு சாதனை இன்னமும் நீடித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்