‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம்

சனி, 22 டிசம்பர் 2007 (16:23 IST)
webdunia photoWD
கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ன் துவ‌க்கமாக அனை‌த்து தேவாலய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌கி‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளி‌‌ன் வாச‌ல்க‌ளிலு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் தொ‌ங்க‌‌விட‌ப்படு‌ம்.

கி‌றி‌ஸ்து ‌பிற‌‌ந்த டிச‌ம்ப‌ர் 25-ம் தேதி உலகெ‌ங்‌கிலு‌ம் உ‌ள்ள கிறி‌ஸ்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக‌த்தா‌ன் தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களை அல‌ங்காரமாக தொ‌ங்க ‌விடு‌கி‌ன்றன‌ர்.

டிச‌ம்ப‌ர் மாத‌ம் ‌பிற‌ந்த உடனேயே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ற்கான ஒரு அழை‌ப்பு ம‌ணியாக அனை‌த்து ‌கி‌‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளிலு‌ம் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌‌த்தை ‌‌மி‌ன் ‌விள‌க்கு அல‌ங்கார‌த்துட‌ன் தொ‌ங்க ‌வி‌ட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.