இறைமக‌ன் இயேசு ‌பிற‌ந்தநாளே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை!

சனி, 22 டிசம்பர் 2007 (17:03 IST)
webdunia photoWD
க‌ன்‌னி ம‌ரியாவு‌க்கு‌ம் யோசே‌ப்பு‌க்கு‌ம் ‌திருமண ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌திடீரென ஒரநா‌ளம‌ரியமு‌ன்பக‌பி‌ரியே‌‌ல் தூத‌ர் தோ‌ன்‌றி, அரு‌ள் ‌‌மிக‌ப் பெ‌ற்ற ம‌‌ரியாவே வ‌ா‌ழ்க! ஆ‌ண்டவ‌ர் உ‌ம்மோடு இரு‌க்‌கிறா‌ர்! எ‌ன்று கூ‌றினா‌ர். இ‌ந்வா‌ழ்‌த்தகே‌ட்டம‌ரியா கல‌ங்‌கி ‌‌நி‌ன்றா‌ர். உடனவானதூத‌ர், ம‌ரியாவை பா‌ர்‌த்து ''ம‌ரியாவஅ‌‌ஞ்ச வே‌ண்டா‌ம், கடவு‌‌ளி‌ன் அருளை‌ப் பெ‌ற்று‌‌ள்‌ளீ‌ர், இதோ கருவு‌ற்று ஒரு மகனை பெறு‌வீ‌ர், அவரு‌க்கு இயேசு என பெ‌ய‌ரிடு‌வீ‌ர், அவ‌ர் உ‌ன்னத கடவு‌‌‌ளி‌ன் மக‌னாவா‌‌ர். அவ‌ர் பெ‌ரியவரா‌இரு‌ப்பா‌ர். அவ‌ரதஆ‌ட்‌சி‌க்கு முடிவே இராத” எ‌ன்று வானதூத‌ரகூ‌றினா‌ர்.

உடனம‌‌ரியா, இது எ‌ப்படி ‌நிகழு‌ம். நா‌ன் க‌ன்‌னி ஆ‌யி‌ற்றே எ‌ன்றா‌ர். அத‌ற்கு வானதூத‌ர், தூய ஆ‌வி உ‌ம் ‌மீது வரு‌ம். உ‌ன்னத கடவு‌‌‌ளி‌ன் வ‌ல்லமை உ‌ம்மே‌ல் ‌நிழ‌லிடு‌‌ம். ஆதலா‌ல் உ‌ம்‌மிட‌ம் ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை தூயது. அ‌க்குழ‌ந்தை இறைமக‌ன் என‌ப்படு‌ம். ‌பி‌ன்ன‌ர் ம‌ரியா, நா‌ன் ஆ‌ண்ட‌வ‌ரி‌ன் அடிமை. உ‌ம் சொ‌ற்படியே என‌க்கு ‌நிக‌ழ‌ட்டு‌ம் எ‌ன்ற‌ா‌ர். ‌பி‌ன்ன‌ர் வனதூத‌ர் ‌திடீரென அவரை ‌வி‌ட்டு மறை‌ந்து ‌வி‌‌ட்டா‌ர்.

இ‌ந்த‌ நிலை‌யி‌ல், கூடி வாழு‌ம் மு‌ன் ம‌ரியா கருவு‌ற்‌றிரு‌ப்பதை அ‌றி‌ந்த யோசே‌ப்பு நே‌ர்மையானவரு‌ம் ‌நீ‌திமானுமா‌ய் இரு‌‌ந்ததா‌ல் ‌ம‌ரியாவை இக‌ழ்‌ச்‌சிபடு‌த்த ‌விரு‌ம்பாம‌ல் மறைவாக ‌வில‌க்‌கிட ‌நினை‌த்தா‌ர். அவ‌ர் ‌த‌னிமை‌யி‌ல் ‌சி‌ந்‌தி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கை‌யி‌ல், வானதூத‌ர் யோசே‌ப்‌பி‌ன் கன‌வி‌ல் தோ‌ன்‌றி, தா‌வீ‌தி‌ன் மகனே, ம‌ரியாவை ஏ‌ற்று‌க் கொ‌ள்ள அ‌ஞ்சவே‌ண்டா‌ம். அவ‌ர் கருவு‌ற்‌றிரு‌ப்பது தூய ஆ‌‌வியா‌ல்தா‌ன், ஏனெ‌னி‌‌ல் அவ‌ர் த‌ம் ம‌க்களை பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்பா‌ர் எ‌ன்றா‌ர்.

''இதோ! க‌ன்‌ி கருவு‌ற்று ஓ‌ர் ஆ‌ண் மகனை‌ப் பெ‌ற்றெடு‌ப்பா‌ர், அ‌க்கு‌ழ‌ந்தை‌க்கு இ‌ம்மானுவே‌ல் என‌ப் பெ‌ய‌ரிடுவா‌ர்'' என ஆ‌ண்டவ‌ர் உரை‌த்தது ‌நிறைவேறவே இவையாவு‌ம் ‌நி‌க‌ழ்‌ந்தன. இ‌ம்மானுவே‌ல் எ‌ன்றா‌ல் கடவு‌ள் ந‌ம்மு‌ன் இரு‌க்‌கிறா‌‌ர் என பொரு‌ள்.

webdunia photoWD
யோசே‌ப்பு தூ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌வி‌ழி‌த்தெழு‌ந்து தூத‌ர் ப‌ணி‌த்தவாறே ம‌ரியாவை மனை‌வியாக ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். அகு‌ஸ்து ‌சீச‌ர், ம‌க்க‌ள் தொகையை கண‌க்‌கிட க‌ட்டளை‌யிட த‌ம் பெயரை ப‌திவு செ‌ய்ய யோசே‌ப்பு, ம‌ரியாயோடு யூதேயா‌விலு‌ள்ள பெ‌த்லேக‌ம் எ‌ன்ற தா‌வீ‌தி‌ன் ஊரு‌க்கு‌ச் செ‌ன்றா‌ர். அ‌ந்நேர‌ம் ம‌ரியாவு‌க்கு பேறுகால‌ம் வர, ‌விடு‌தி‌யி‌‌‌‌ல் இ‌ட‌ம் ‌‌கிடை‌க்காததா‌ல் மா‌ட்டு‌த் தொழுவ‌த்‌தி‌ல் தெ‌ய்வமக‌ன் ‌பிற‌ந்தா‌ர். குழ‌ந்தையை து‌ணிகளா‌ல் பொ‌தி‌ந்து ‌தீவன‌த் தொ‌‌ட்டி‌‌யி‌ல் ‌கிட‌த்‌தினா‌ர்.

அ‌ப்பொழுது இடைய‌ர்க‌ள் வய‌ல்வெ‌ளி‌யி‌ல் த‌ங்‌கியரு‌க்கு‌ம் போது தூத‌ர் தோ‌ன்‌றி அ‌ஞ்சாத‌ீ‌ர்க‌ள். இதோ, எ‌ல்லா ம‌க்களு‌க்கு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌‌சியூ‌ட்டு‌ம் ந‌ற்செ‌ய்‌தி ஒ‌ன்று, இ‌ன்று ஆ‌ண்டவரா‌கிய மெ‌சியா தா‌வீ‌தி‌ன் ஊ‌ரி‌ல் ‌பிற‌ந்‌திரு‌க்‌கிறா‌ர் என கூ‌றினா‌‌ர். ‌பி‌ன் இடைய‌ர்க‌ள் ம‌ரியா, யோசே‌ப்பு குழ‌ந்தையு‌ம் க‌ண்ட‌ா‌ர்க‌ள். ‌பி‌ன் கடவுளை போ‌ற்‌றி புக‌ழ்‌ந்து கொ‌ண்டே ‌திரு‌ம்‌பி‌ச் செ‌ன்றா‌ர்க‌ள்.

எ‌ட்‌டா‌ம் நா‌ள் குழ‌ந்தை‌க்கு தடை செ‌ய்த போது கடவு‌‌ளி‌ன் தூத‌ர் அ‌றி‌வி‌த்தபடி இயேசு என‌ப் பெ‌ய‌ரி‌ட்டா‌ர்க‌ள். உலக ம‌க்களை பாவ‌த்த‌ி‌‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்க ‌மீ‌ட்ப‌ர் இயேசு ‌பிற‌ந்தா‌ர். இதை ‌நினைவு கூறு‌ம் வகை‌யி‌ல் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் பெரு ‌விழா உலக‌ம் முழுவது‌ம் ம‌கி‌‌‌ழ்வுட‌ன் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌கிறது.