இயேசு நாத‌ர் சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்!

சனி, 22 டிசம்பர் 2007 (16:25 IST)
இயேசுநாதர் இப்பூவுலகில் மண்ணின் மைந்தனாக அவதரித்தது வரலாறு என்பதை யாவரும் அறிவர். சரித்திரச் சான்றுபடி அவர் பிறப்பு கி.மு. 4-5 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இயேசு நாதர் ஏறக்குறைய (33 1/2) ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இம்மாய உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்யத்தை தேட மக்களிடையே போதித்தார்.

இந்த இறையரசனின் வழிகளை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

சிலுவையில் இயேசு :

அந்த நாட்களில் கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளையும், (அல்லது) ஒருவரை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

webdunia photoWD
இதன்படி தங்கள் மனம் நிறைவடைய இயேசு நாதரை சிலுவையில் அறைந்தனர். அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விடுமுன் 7 வார்த்தைகளைச் மொழிந்தார்.

ஏழு வார்த்தைகள் :

1) "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)

2) "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோக‌‌த்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

3) தம்முடைய தாயை நோக்கி : "அ‌ம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)

4) "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27 : 46)

5) எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19 : 28)

6) இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

7) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23 : 46)