மேலும், "உலக மக்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளை நினைப்பதிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதிலும் நேரத்தை செலவிட வேண்டும். உலகில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு கவலை அளிப்பதாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்" என்றார் அவர்.
இந்த உரை உலகம் முழுவதும் 60 நாடுகளில் மொழி பெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடமான வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
போப் 16-ம் பெனடிக் மெழுகுவர்த்தி ஏந்தி உலக அமைதிக்காக பிரார்த்தனை நடத்தினார். பின்னர் தேவாலயத்தின் வளாகத்தில் கூடி இருந்த லட்சக்கணக்கானவர்களை ஜன்னல் வழியாக பார்த்து ஆசி வழங்கினார்.