ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டையில், வெண்ணை, சர்க்கரை கலவையை கொட்டி நன்கு கலக்கவும்.
அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும்.
சாக்கலேட் கூழை முட்டை, சர்க்கரை, வெண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடித்துக் கலக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
கேக்கை நன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் உங்களுக்குத் தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.அசத்துங்கள்....