ஆஸ்திரேலிய குட்டிஸ் இந்த கிறிஸ்மஸை வீடியோ விளையாட்டுப் பொருட்களுடன் கொண்டாடுவதில் தான் அதிக ஆவலுடன் உள்ளனர்.
டி.எம்.ஏ.ஜி. இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகள் நின்டெண்டோ டி.எஸ். வகையான வீடியோ விளையாட்டுப் பொருட்களைத் தான் ஆர்வத்துடன் தேர்ந்தெடுப்பதாக கூறியுள்ளனர்.
சில குழந்தைகள் பைக், பனிச்சறுக்கு உபகரணங்களை விரும்பவுதாகவும், அதிலும் குறிப்பாக கிறிஸ்டி டெமான்ஸ் இரகங்களையே பெரிதும் விரும்பவுதாகவும் தெரிவித்துள்ளனர். குட்டிப் பையன்களைப் பொறுத்த வகையில் வெளியில் சென்று விளையாட ஏற்றவற்றைத் தான் விரும்பவுதாகவும், பெண் குழந்தைகள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகம் தேர்ந்தெடுப்பதாகவும் அந்த கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வீடியோ விளையாட்டுப் பொருட்களையும், குழந்தைகளையும் தற்போது பிரித்து பார்க்க இயலாத நிலை உள்ளதாக கே ஜோன் இதழின் ஆசிரியர் மெலீசா ஹப்ஜி கூறியுள்ளார். இந்த ஆண்டு 8 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள், பி.எஸ்.3, நின்டெண்டோ டி.எஸ்., நின்டெண்டோ வீ ஆகிய வீடியோ விளையாட்டுப் பொருட்கள் இன்றி வாழமாட்டார்கள் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேட்டரி உலகில் முன்னிலை வகித்து வரும் டியுரோசெல் பேட்டரி நிறுவனம் நடப்பு ஆண்டு குழந்தைகள் விளையாட்டுக்காக அண்மையில் அறிமுகப்படுத்திய 10 வகையான விளையாட்டுப் பொருட்களை உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதில் 100 குழந்தைகள் ஆஸ்திரேலியக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இடத்தில் நான்கு சக்கர ஸ்கூட்டரான அஸ்பாஃல்ட், அழகான மிதிவண்டி, தொலைக்காட்சி திரையுடன் கூடிய மோட்டார் பைக், மோக்கி ஸாஸர் சுவிங் பந்து ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆச்சரியத்தை தரும் வகையில்குழந்தை நல மருத்துவர் கிம்பர்லே ஓ பிரையன், உடல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான விளையாட்டுப் பொருட்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய குழந்தைகளின் கொழுப்புச் சார்ந்த உடல் கோளாறுகளைத் தடுக்க இந்த விளையாட்டுப் பொருட்கள் உதவும் என்று கிம்பர்லே ஓ பிரையன் தெரிவித்துள்ளார். விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை அதிகம் உடல் ரீதியாக செயல்பட வைப்பதுடன், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக இருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அதிகம் ஒன்றாக இணைந்திருப்பது அரிதான ஒன்றாகும். குழந்தைகள் பொதுவாக தங்களின் அறைகளில் பொம்மைகளுடன் தனியாக விளையாடிக் கொண்டிருப்பது தான் அவர்களுக்கு கிடைத்த வாழ்க்கை சூழல். ஆனால் கிறிஸ்துமஸ் விழாக்காலம் அக்குழந்தைகளின் வாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சியைத் தருவதற்கு காரணம் அப்போது தான் தங்கள் பெற்றோருடன் இணைந்து இருக்கும் நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.