கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் தோன்றியது எப்போது?

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் வருடாவருடம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் ஆகும். ஆரம்பகால வரலாறுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டதாக ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற போதும் தற்போது உலகம் முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய அம்சம் 'கிறிஸ்துமஸ் மரமாகும்'. 1510ஆம் ஆண்டு 'ரிகா' என்ற இடத்தில் தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் முதன்முதலில் தோற்றம் பெற்றது. கிறிஸ்துமஸ் மர அலங்காரத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதில் எப்போதும் உச்சிக்கூம்பில் யேசுக்கிறிஸ்துவின் பிறப்பை உணர்ந்து அவரைத் தரிசிக்க வந்த மூன்று மன்னர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரம் வைக்கப்படும். அதுபோல மரம் முழுவதும் வர்ண விளக்குள், வானதூதர்  பொம்மைகள், பரிசுப்பொருட்கள், முத்துக்கள், மணிகள், மாலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்படும். 
 
கிறிஸ்துமஸ் பண்டிகையில் மிக முக்கியத்துவம் பெறும் இன்னொரு விஷயம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையாகும். தொழில்நுட்ப ரீதியாக நாம் பல்வேறு வகையில் முன்னேறிய போதும் மரபு ரீதியாக இன்றும் இது பேணப்படுகின்றது.
 
கிறிஸ்துபிறப்புகுறித்து பல முரண்பாடான கருத்துக்கள் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்ற போதிலும், அதிகமான  நாடுகளில் மார்கழி 25-ஆம் திகதியே கிறிஸ்துமஸ் தினமாக அனுஷ்ரிக்கப்படுகின்றது. அடிமை வாழ்வு வாழ்ந்த யூத மக்கள் ஒரு  அரசியல் ரீதியான தலைவரையும், அரசியல் ரீதியான விடுதலையுமே எதிர்பார்க்கையில் யேசு ஒரு ஆன்மீகத்தலைவராகவே  வந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்