நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டியும் தேசிய பிரார்த்தனை கூட்டமைப்பு சார்பில் சென்னை உள்பட நாடு முழுவதும் 15 நகரங்களில் 72 மணி நேர சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்த பிரார்த்தனை நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
தேசிய அளவிலான இந்த பிரார்த்தனையின் நிறைவு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு சபைகளைச் சேர்ந்த தலைவர்கள், போதகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
பேராயர் தயானந்தம், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, போதகர்கள் சார்லஸ் பின்னி ஜோசப், ஆனந்த் ஆகியோர் ஜெபம் செய்தனர்.