கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நே‌ற்று நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.

கர்த்தர் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்படும் முன்பு உள்ள நாட்களும் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலம் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது.

நேற்று குருத்தோலை ஞாயிறு தினமாகும். இந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்வது உண்டு. அதன்படி நேற்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் ஊர்வலம் நடத்தினார்கள்.

ஊ‌ர்வல‌‌ங்க‌ளி‌ல் ஏராளமான ஆண்கள், பெண்கள், ‌சிறா‌ர்களு‌முருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி ‌கி‌றி‌‌ஸ்தவ பாட‌ல்களை‌‌ப் பாடி‌க் கொ‌ண்டு‌ச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்