இயேசு கிறிஸ்துவின் அன்பு!

சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் காண்கிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை  விளங்கப் பண்ணுகிறார் (ரோம 5:8). இறைவனின் அன்பை உலகிற்குக் கொண்டுவந்தவரும் அதை செயலில் காட்டியவரும் இயேசுதான்.
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி  இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). கிறிஸ்து உலகத்துக்கு வராவிட்டால் நாம் பாவத்தில் மரித்திருப்போம்.
 
சிலுவையில் பாவத்தின் பயங்கரத்தைக் காண்கிறோம். தீமையோடும் தீய சக்தியோடும் போராட வேண்டியிருந்தது. இருதயம் கடினம் குருட்டாட்டம் பொறாமை,  பெருமை ஆகிய இவைகள் சமயத்தலைவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டன. பொது மக்கள் ஏனோதானோ வென்றிருந்தார்கள். யூதாஸ் காட்டிக்  கொடுத்தான். பேதுரு மறுதலித்தான். சீஷர்கள் ஓடிப்போய்விட்டார்கள். பிலாத்து நீதி செலுத்தி அவரை விடுதலைச் செய்யத்தவறிவிட்டான். போர்ச்சேவர்கள்  கேலி செய்து வாரினால் அடித்தார்கள். 
 
பாவமில்லாத அவர் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே சிலுவையில் ஒப்புக்கொடுக்க நேர்ந்தது. நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார் (1பேதுரு 2:24). பாவமானது மனிதனுக்கும் கடவுளுக்கும்  இடையே பிரிவினை உண்டுபண்ணுகிறது. சிலுவையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்