பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலய பெருவிழா

திங்கள், 5 ஜனவரி 2009 (14:36 IST)
பெருங்களத்தூர் காமராஜ் நகர் குழந்தை இயேசு திருத்தல ஆண்டு பெருவிழா 7ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

செங்கை மறை மாவட்ட பொருளாளர் பாக்கியரெஜிஸ் தலைமை வகிக்கிறார். 8ஆம் தேதி முதல் ஒவ்வொரு அன்பியங்கள் சார்பில் சிறப்பு தியானம், ஒரு நாள் தியானம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

14ஆம் தேதி மாலை பொங்கல் விழாவும், 15ஆம் தேதி மாலை திருத்தல ஆலய அபிஷேக ஆண்டு விழாவும் நடக்கிறது.

16ஆம் தேதி காலையில், திருத்தல பெருவிழா கொண்டாட்டமாக, காலை 8 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 5 மணிக்கு செங்கை மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்