ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை

மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸஜேம்ஸஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (St. thomas) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் SDB அடிகளார் தலைமையில் செயல்பட்டது.

அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Parish Priest) அருட்திரு. இனிகோ (Rev. Fr. Inigo) அடிகளாரை நியமித்தது. தற்போது சுமார் 800 குடும்பங்களுக்கு மேலாக பங்கின் உறுப்பினர்களாக இருந்து பங்கு தந்தையின் தலைமையில் ஆன்மீகத்திலும் சமூக பணியிலும் இவ்வாலயம் சிறந்து விளங்குகிறது. மேலும் பிற மதத்தினரை சார்ந்தவர்களும் இவ்வாலயத்திற்கு வந்து ஜெபித்து கடவுளின் அருளை பெற்று செல்கின்றனர்.

பல வகையில் வளர்ந்து வருகிற இவ்வாலயம் குழந்தை இயேசுவின் சிலை நிறுவப்படுகிறது, இச்சிலையானது பங்கு தந்தை இனிகோ அவர்களின் நண்பரும் அருட் தந்தையுமான அருள்சாமி OFM அவர்களால் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்திலிருந்து அங்குள்ள பேராயரின் ஆசிரோடு கொண்டு வந்து தரப்பட்ட சிலையாகும்.

ஒரு வருடத்தில் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்தில் நான்கு குழந்தை இயேசு சுரூபங்கள் (சிலைகள்) ஒரே மரத்தினால் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட சுரூபங்கள் உலகத்தில் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் சுரூபம் (சிலை) இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களூரில் உள்ள விவேக் நகரில் குழந்தை இயேசு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மா நகரத்தில் அமைந்துள்ள குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்திற்கு கிடைக்க பெற்றது மேன்மையான சிறப்பாகும்.

குழந்தை இயேசுவின் பக்தி வரலாற

இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் குழந்தை இயேசுவின் பக்தி பரவியிருந்த ஆரம்ப காலத்தில் திருச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தது என வரலாறு தெரிவிக்கிறது.

இச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய மோரிக்-தெ-லாரா (Maria Moure Quez-De-Lara) என்பவரிடம் அரும் பெரும்பரம்பரை செல்வமாக பேணி பாதுகாக்கப்பட்டது.

இளவரசி தன் மகள் பொலிக் சேனா ரோகோவிட்ஸ்க்கு (Polixena Libkowitz) இச்சுரூபத்தை திருமண பரிசாக தந்தார்.

கி.பி. 1623 ஆம் ஆண்டில் பொலிக் சேனா என்ற இளவரசியின் கணவர் மறைந்த பிற்பாடு இவ் இளவரசி தன் எஞ்சிய வாழ்நாட்களை பக்தி பாணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க பிரேகு நகர் கார் மேல் துறவிய சபைக்கு இச்சுரூபத்தை கொடுத்தார்.

மேலும் இளவரசி கூறிய வார்த்தை குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள் குறை என்பதே இனி இருக்காது அவ்வாறே பெற்று கொண்ட சபையில் ஆசீர்வாதங்களும் பெருகி வந்தன.

கார்மேல் சபையில் மிகுந்த பக்தி கொண்ட அருட்திரு சிரிஸ்ல் என்பவரால் கி.பி. 1630 ஆண்டின் கடும்போருக்கு பின் பிரேகு நகரத்தில் உள்ள சிறு கோவிலில் குழந்தை இயேசு சுரூபத்தை நிறுவினார். அப்பொழுது அச்சுரூபம் சிதைந்த நிலையில் இருந்தது. அதை சீர் செய்யாமல் போனதால் பல இன்னல்களும் அவர் ஆட்கொள்ளப்பட்டார்.

அவருக்கு பின் வந்த துறவியார் திருச்சுரூபத்தை சீர் செய்து புது பொலிவுண்டாக்கினார். ஒரு சமயம் அந்நகரில் தொற்று நோய் ஒன்று பரவியது அந்நோய் இந்த துறவியரையும் பற்றியது அவர் அச்சுரூபத்தின் முன் நலம் பெறுவதற்காய் வேண்டினார். அவ்வாறு நலம் பெற்று எழுந்தால் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொடுப்பதாக நேர்ந்து கொண்டார் அதன்படியே குணம் பெற்றார் அவரும் நேர்ந்து கொண்டபடி கடனை நிறைவேற்றினார். அதுமட்டுமில்லாமல் மக்களும் பயன்பெற வேண்டுமென்று குழந்தை இயேசுவின் பக்தி முயற்சியை ஏற்படுத்தினார் அதன் வரங்களும் அருட்கொடைகளும் வழிந்தோடின பிரேகு நகரமெங்கும் இச்சுரூபத்தின் புகழ்பரவியது. மேலும் குழந்தை இயேசுவின் பக்தி உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்