`ப‌'வி‌ல் துவ‌ங்கு‌ம் பழமொ‌ழிக‌ள்

செவ்வாய், 30 மார்ச் 2010 (16:45 IST)
குழ‌ந்தைகளா உ‌ங்களு‌க்காக ப எ‌ன்ற எழு‌த்‌தி‌ல் துவ‌ங்கு‌ம் பழமொ‌ழிக‌ள் ‌சிலவ‌ற்றை இ‌ங்கு கொடு‌த்து‌ள்ளோ‌ம்.

பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.

பசியுள்ளவன் ருசி அறியான்.

பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.

படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

படையிருந்தால் அரணில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்