மறக்கக் கூடாதது - நன்றி பிரியக் கூடாதது - நட்பு உயர்வுக்கு வழி - உழைப்பு மிக மிக நல்ல நாள் - இன்று நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு விலக்க வேண்டியது - விவாதம் செய்யக் கூடியது - உதவி செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம் ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு நம்பக் கூடாதது - வதந்தி கீழ்த்தரமான விஷயம் - பொறாமை மிகவும் கொடிய நோய் - பேராசை மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி மிகவும் வேண்டாதது - வெறுப்பு