க‌ற்க வே‌‌ண்டு‌ம்

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:26 IST)
ந‌ன்‌றி எ‌ன்னு‌ம் ப‌ண்பையே
நாயை‌ப் பா‌ர்‌த்து க‌ற்கலா‌ம்

அ‌ன்னை போல ‌பிற‌ரிட‌ம்
அ‌ன்பு கா‌ட்ட வே‌ண்டுமே

தேனை‌ச் சே‌ர்‌க்கு‌ம் ஈ‌யினா‌ல்
சே‌ர்‌த்து வை‌க்க‌க் க‌ற்கலா‌ம்.

மீனை‌ப் போல ‌நீ‌ரிலே
மித‌ந்து ‌நீ‌ந்த வே‌ண்டு‌மே

எறு‌ம்பை‌ப் போல வ‌ரிசையா‌ய்
எ‌ங்கு‌ம் செ‌ல்ல க‌ற்கலா‌ம்
குறு‌ம்பு செ‌‌ய்யு‌ம் செயலையே
குற‌ை‌த்து‌க் கொ‌ள்ள‌ல் வே‌ண்டுமே

இ‌னிய சொ‌ற்க‌ள் கூ‌றினா‌ல்
இ‌ன்ப‌ம் அ‌திக‌ம் காணலா‌ம்
கு‌னி‌ந்து அட‌ங்கு‌ம் ப‌ண்‌பினா‌ல்
குறை களை‌ந்து வாழலா‌ம்,

வெப்துனியாவைப் படிக்கவும்