இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

புதன், 10 நவம்பர் 2010 (17:16 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திருவ‌ள்ளுவரை‌ப் ப‌ற்‌றி அ‌றிய‌ப்ப‌ட்ட செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர்.

1.1.2 வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.


இ‌ன்று அ‌திகமான மொ‌ழிக‌ளி‌ல் மொ‌ழிபெய‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திரு‌க்குறளை, அ‌ன்றைய ‌நா‌ளி‌ல் அர‌ங்கே‌ற்ற‌ம் செ‌ய்யவே அத‌னை இய‌ற்‌றிய ‌திருவ‌ள்ளுவ‌ர் ‌சிரம‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ப‌ல்வேறு சோதனைகளை‌க் கட‌ந்தே ‌திரு‌க்குற‌ள் அர‌ங்கே‌ற்ற‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்