தங்க நாணய கதை.....

வியாழன், 24 ஜனவரி 2013 (19:42 IST)
FILE
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார்.

சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார்.

குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தான்.அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார்.
கொடுத்தார்.

குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.

இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினான். இப்போது ஊர் தலைவர் குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தை என்றார் அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.

இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, குரு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள், நீ தொலைதிருப்பதோ 40 தங்க நாணயங்கள் எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார்.

இப்போது குருவை பார்த்த தலைவர் நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள்ளலாம் என்றார்.

திருடனுக்கு தேள் கொட்டிய கதை போல, ஊர்த்தலைவரின் தீர்ப்பை கேட்ட ராமசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்