ஒரு நாய் பொதுவாக ஒரு முறை குட்டி போடும்போது 8 முதல் 9 குட்டிகள் போடுவது தான் வழக்கம். ஆனால் இங்கிலாந்தில் 4 வயது நாய் ராட்வெய்லர் அதிக அளவாக 18 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது.
கர்ப்பமாக இருந்த ராட்வெய்லர் கடந்த ஜுலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பகல் 12.50 மணிக்கு குட்டிகளை ஈன்றது. அதன் உரிமையாளர் இது பற்றிக் கூறுகையில், முதலில் ராட்வெய்ரல் குட்டிகளை போட ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாக கணக்கிட்டு வந்தேன். 12.50 மணியளவில் குட்டிகளை போட ஆரம்பித்தது. ஒவ்வொரு குட்டியாக போட்டுக் கொண்டே இருந்தது. 10 குட்டி வரும்போது எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. ஆனால் அப்போதும் குட்டிகள் வந்து கொண்டிருந்தன. 18 குட்டிகள் வரை அது ஈன்று முடித்ததும் எனக்கே அப்பாடியோவ் என்று இருந்தது என்று மலைக்கிறார்.
18 குட்டிகளில் ஒன்று பிறக்கும்போதே இறந்து போனதாகவும், மற்றது பிறந்து 2 நாட்களுக்கு பிறகு இறந்து விட்டதாகவும் அவர் கூறினார். மற்ற 16 குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. அவற்றில் 10 பெண் குட்டிகளும், 6 ஆண் குட்டிகளும் அடங்கும்.
ஒரே நேரத்தில் 13 குட்டிகள் போடப்பட்டது தான் இங்கிலாந்தை பொறுத்தவரை அதிகபட்சம் ஆகும். எனவே இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்த நாய் குட்டிப்போட்டே சாதனை படைத்துவிட்டது என்று கூறலாம். ஆனால் உலக அளவில் ஒரே நேரத்தில் 24 குட்டிகள் ஈன்றது தான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.