குழ‌ந்தைகளு‌க்கான பழமொ‌ழிக‌ள்

வியாழன், 30 செப்டம்பர் 2010 (17:08 IST)
பழமொ‌ழிக‌ள் பலவு‌ம், நம‌க்கு மு‌ன் வா‌ழ்‌ந்த பெ‌ரியவ‌ர்க‌ள் த‌ங்களது அனுபவ‌த்தை‌க் கொ‌ண்டு த‌ங்களு‌க்கு‌ப் ‌பி‌ன் வாழ வருபவ‌ர்களு‌க்கு வ‌ழிகா‌ட்டு‌ம் நோ‌‌க்கோடு கூ‌றிய வா‌ர்‌த்தைகளாகு‌ம்.

இ‌ங்கு ‌குழ‌ந்தைகளு‌க்கான ‌சில பழமொ‌ழிகளை கூ‌றியு‌ள்ளோ‌ம்.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

வெப்துனியாவைப் படிக்கவும்