ஒரு காலத்தில் தொப்பிகள் தயார் செய்து விற்கும் விற்பனையாளர் ஒருவர் இருந்தார்.
அவரது தொப்பிகளை விற்க. அவன் தன் தலையின்மேல், ஒரு கூடையில் தொப்பிகளை தூக்கி கொண்டு காடுகள் வழியாக சந்தையில் விற்க நடந்து போய் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பாடல் பாடினான்.
நான் சந்தைக்கு போகிறேன் என் தொப்பிகளை விற்க சந்தைக்கு போகிறேன்.
என்று பாடிக்கொண்டே போய் கொண்டிருந்தான். களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்க அவர் தனது கூடையை கீழே இறக்கி வைத்து விட்டு ஒரு மரத்தின் கீழ் உறங்கிவிட்டனர்.
தொப்பிகாரன் விழித்தபோது, அவரது கூடை அனைத்தும் காலியாக இருந்தது. இதனை பார்த்து சுற்றிலும் தேடிப்பார்த்தான், எங்கும் காணவில்லை.பிறகு மரத்தில் உள்ள ஒரு குரங்குகள் கூட்டம் அதனை தங்கள் கை, தலைகளில் போட்டு கொண்டிருந்தன.
குரங்குகளிடம் கெஞ்சி கேட்டு பார்த்தான். அவைகள் கொடுக்கவில்லை. இறுதியாக தாம் செய்வதை போல செய்வதை பார்த்த தொப்பிகாரன் அவனுடைய தொப்பிகளை கழற்றி தொப்பியில் போட்டான், குரங்குகளும் அவ்வாறே செய்தது. அனைத்து தொப்பிகளும் தரைமட்டத்திற்கு வந்தது.
தொப்பிகளை எடுத்து கூடையில் நிரப்பி கொண்டு சந்தைக்கு சென்று பணமாக்கி மகிழ்ந்தான்.
இந்த கதை மூலம் தொப்பிகாரன் தனது சமயோஜித புத்தியினால் குரங்குகளிடம் இருந்து தொப்பிகளை பெற்றான். இதனால் குழந்தைகளுக்கு சமயோஜித அறிவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.