வயலில் மறைந்திருந்த புதையல்

செவ்வாய், 13 மே 2014 (16:44 IST)
ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார்.

இந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர்.
 
இது அந்த முதியவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு நாள் முதிவருக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக அவரது மகன்களை அழைத்த அவர், நான் நமது வயலில் விலைமதிக்க முடியாத புதையலை புதைத்து வைத்துள்ளேன். ஆனால், அதை சரியாக எங்கு புதைத்தேன் என எனக்கு ஞாபகமில்லை. நான் இறந்த பிறகு, நீங்கள் ஐந்து பேரும் வயலை நன்றாக தோண்டி அந்த புதையலை எடுத்து பகிர்ந்துகொள்ளுங்கள்' என்றார்.
 
மகன்களிடம் இந்த தகவலை சொன்ன முதியவர் அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போனார். முதியவரின் மரணத்திற்கு பிறகு அவரது மகன்கள் அவர் சொன்னது போல புதையலை தேட வயலுக்கு சென்று அனைத்து இடத்திலும் தோண்டி பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த புதையலும் கிடைக்கவில்லை. மாறாக இவர்கள் தோண்டியதில் நிலம் மட்டும் நன்றாக உழப்பட்டிருந்தது. 
 
இதனை கண்ட கிராமத்தினர், நிலத்தில் கோதுமை விதைத்தால் நல்ல விளைச்சலை பெறலாமென அறிவுரை சொல்ல அதன்படி, பயிரிட்ட சகோதரர்கள் நல்ல விளைச்சல் கண்டு கைநிறைய பணம் சம்பாதித்தனர்.
 
சம்பாதித்த பணத்தை சகோதரர்கள் பிருத்துகொண்ட போதுதான் அவர்களுக்கு அந்த முதியவர் சொன்னன புதையலுக்கு இதுதான் அர்த்தமென புரிந்தது.
 
அந்நாளில் இருந்த சகோதரர்கள் ஐந்து பேரும் கடினமாக உழைத்து ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்