‌‌விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

திங்கள், 7 டிசம்பர் 2009 (12:22 IST)
‌‌விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைகளை ‌நீ‌ங்க‌ள் க‌ண்டு‌பிடியு‌ங்க‌ள். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் ‌கீழே இரு‌க்‌கிறது படி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

1. பது‌ங்‌கி வரு‌ம் ‌திருட‌ன் போல.. பா‌ய்‌ந்து ‌பிடி‌க்கு‌ம் காவல‌ர் போல அது எ‌ன்ன?
2. ப‌ச்சை உடலு‌க்காரனு‌க்கு உதடெ‌ல்லா‌ம் ‌சிவ‌ப்பு அது எ‌ன்ன?
3. ச‌த்த‌ம் போ‌ட்டு அழை‌ப்பா‌ன்.. ‌பிற‌ர்‌க்கு கே‌ட்பாம‌ல் கதை‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்?
4. பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன?
5. ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்?
6. ‌பிடி இ‌ல்லாத குடையை தொட முடிய‌வி‌ல்லை அது எ‌ன்ன?

விடைக‌ள்

1. பூனை
2. ப‌ச்சை‌க் ‌கி‌ளி
3. தொலைபே‌சி
4. தே‌ன்
5. ப‌ம்பர‌ம்
6. வான‌ம்

வெப்துனியாவைப் படிக்கவும்