‌விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌ள்

விடுகதைக‌ள் தெ‌ரி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது குழ‌ந்தைகளு‌க்கு அவ‌சிய‌ம். ஏனெ‌னி‌ல் அது அவ‌ர்களது அ‌‌றிவு‌த் ‌திறனை வள‌ர்‌க்க உதவு‌ம்.

1. வெடி வெடித்தும் இடிந்து விழாத கோட்டை அது என்ன?

2. ஊரார் அறிந்த காரம், ஊரை அடக்கும் காரம் அது என்ன?

3. வடிக்காத சோறு, கொதிக்காத குழம்பு என்ன?

4. பட்டத்தரசி பவனி வரும்போது பரிகாரங்கள் பக்கத்தில் வரும். அது என்ன?

5. உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்?

6. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது?


ப‌தி‌ல்க‌ள்

1. இடி - வானம்

2. அதிகாரம்

3. பொங்கல், சட்னி

4. நிலா - நட்சத்திரங்கள்

5. கடல்

6. வெளவால்

வெப்துனியாவைப் படிக்கவும்