1. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன? 2. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன? 3. தச்சன் செய்யாத கதவு, மூடினாலும் திறந்தாலும் சப்தம் வராத கதவு. அது என்ன? 4. முதுகை தொட்டால் மூச்சு விடுவான்: பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்? 5. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன? 6. சிகப்பு பைக்குள் தங்க காசுகள். அது என்ன?