குண்டர் சட்டத்தில் 3 வயது குழந்தை

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (16:03 IST)
3 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா?

ஆம். உண்மைதான். உத்திரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் தான் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்மாவட்ட காவல்துறையினர், ரவுடிகளையும், குண்டர்களையும் பிடித்து வழக்குப் பதிவு செய்யும்போது உணர்ச்சி வயப்பட்டு, முகேஷ் என்பது 3 வயது சிறுவன் என்பதை அறியாமல் அவன் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை ஹலியாபுர் காவல்நிலைய அதிகாரிதான் கண்டுபிடித்துள்ளார். அதாவது கிரம்மஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த சந்திரிகா பிரசாத் என்பவரின் 3 வயது மகன் முகேஷ் என்பதும், ரவுடிகள் மற்றும் குண்டர்களின் பெயர்களுடன் தவறாக இவனது பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், சிறுவனை தவறாக குண்டர் சட்டத்தில் பதிவு செய்த இரண்டு காவலர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெருவில் விளையாடியது குற்றமா? சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தது குற்றமா? என்ன குற்றத்திற்கான இவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்று தெரியவில்லையே?

வெப்துனியாவைப் படிக்கவும்