1. மரமுண்டு ஆனால் கிளையில்லை., மட்டையுண்டு ஆனால் கட்டையில்லை; பூவுண்டு மணமில்லை. அது என்ன? 2. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது; கையால் தொட்டால் காணாமல் போகுது. அது என்ன? 3. டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு; நோயப் பரப்பிட்டு காசு வாங்காமல் பறந்து போயிட்டாரு. அவர் யாரு? 4. உச்சியிலே பச்சைத் தோகை; நெளிந்து வளைந்த உடல், ஆனால் மயில் அல்ல அது என்ன? 5. ஓடும் ஆனால் இருக்கும் இடத்தை விட்டு நகராது. அது என்ன? 6. பச்சை உடை அணிந்திருப்பாள்; பசுந்தளிர் தின்றிடுவாள். அது என்ன?
விடைகளைக் காணுங்கள்
1.வாழை மரம் 2.நீர்க்குமிழி 3.கொசு 4.கரும்பு 5.கடிகாரம் 6.கிளி