நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது நேரத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
WD
எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஓர் இறுதி உண்டு. எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. எந்த வேலையைச் செய்யத் தனக்கு தகுதி உள்ளது என்பதை அறிந்து அந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதே இன்பத்தைக் காண இனிய திறவுகோல். விடாமுயற்சி மூலம் தாக்குப் பிடிக்கும் சக்தியை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற முடியும்.
- பாரதியார்
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் உன் விரோதிகள். நமக்கு எது தெரியுமோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுவது நல்லது. தெரியாததைப் பற்றிப் பேசினால் அவமானப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை.
- பெர்னாட்ஷா
தொண்ணூற்று ஒன்பது சதவிகித உழைப்பும் ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது. என்னுடைய வாழ்க்கையில் வேலை என்று எதனையும் செய்ய வில்லை. சோதனைச் சாலையிலேயே விளையாட்டாகக் காலம் கழித்தேன். அதுதான் இத்தனை சாதனைகளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.