அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1959ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி, விளையாட்டு பொருட்கள் கண்காட்சி ஒன்றில் பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டது.
இளம் வயது நாகரீக பெண்ணாக தோற்றமளிக்கும் பார்பி பொம்மையின் அனைத்து அம்சங்களும் அனைவரையும் கவர்வதாக இருக்கும்.
பார்பியின் உண்மையான பெயர் பார்பி மில்லிசென்ட் ராபர்ட்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தக துறை பெண் ரூத் ஹாண்ட்லர்தான் இந்த பொம்மையை உருவாக்கினார். அதற்கு, ஜெர்மனியின் பைல்டு லில்லி என்ற பெண் பொம்மைதான் அவருக்கு தூண்டுதலாக இருந்துள்ளது.