‌விடுகதைகளு‌ம், ‌விடைகளு‌ம்

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (10:44 IST)
விடுகதைகளு‌ம், ‌விடைகளு‌ம் உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்‌தவை எ‌ன்பது எ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியு‌ம். இ‌ந்த வார ‌விடுகதை இ‌ங்கே.

கே‌ள்‌விக‌ள்

1. பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌ம் வே‌ண்டா‌ம், ‌விசாவு‌ம் வே‌ண்டா‌ம், உலக‌த்தையே சுத்தி வரலாம். அது என்ன?
2. மண்ணைச் சாப்பிட்டு ம‌ண்‌ணிலேயே வா‌ழ்‌ந்து ம‌‌ண்ணோடு ம‌ண்ணாவா‌ன். அவன் யார்?
3. கதிர் அடிக்காத களம். உ‌யி‌ர் ப‌‌றி‌க்கு‌ம் கள‌ம் அது என்ன?
4. உயரத்திலிருந்து ‌விழுவா‌ன் அடியே படாது, தரை‌க்கு‌த்தா‌ன் சேதாரமாகு‌ம் அது என்ன?
5. பச்சைக் கீரை பொரிக்க உதவாது. வழு‌க்க உதவு‌ம் அது என்ன?
6. பேப்பர் ‌கிடையாது, வா‌ய்‌ப்பாடு தெ‌ரியாது. கண‌க்‌கிலோ பு‌லி. அது என்ன?
7. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலை‌யில்லை. அவன் யார்?
8. பணத்தை அள்ளித் தருவதாக‌க் கூ‌றி பண‌த்தை எ‌ல்லா‌ம் சுரு‌ட்டி‌க் கொ‌ள்ளும் பூதம். அது என்ன?
9. அண்டா‌வி‌ல் இரு‌க்கு‌ம் த‌ண்‌ணி அ‌ள்‌ளினாலு‌ம் குறையாது அது என்ன?
10. வாலுள்ளவ‌ன் ஆனா‌ல் பற‌ப்பா‌ன் அவன் யார்?

விடைக‌ள்

1. கனவு
2. மண்புழு
3. போர்க்களம்
4. அருவி நீர்
5. பாசி
6. கால்குலேட்டர்
7. மணி
8. லாட்டரிச் சீட்டு
9. கிணற்று நீர்
10.காற்றாடி

வெப்துனியாவைப் படிக்கவும்