திருட்டு மகன்

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (12:24 IST)
தன் மகன் எந்த பொருளையும் எளிதில் திருடிவிடும் குணம் கொண்டிருந்தான். அதை மாற்ற திருடுபவர்களுக்கு கடவுள் தண்டனை அளிப்பார் என்று உணர்த்தி தன் மகனை திருத்த நினைத்தால் தாய்.

அதற்காக கோவில் பூசாரியிடம் தன் மகனை அனுப்பி வைத்தார்.

பூசாரி அந்த பையனைப் பார்த்து கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவன் திருதிருவென முழித்தான்.

மீண்டும் கடவுள் எங்கே இருக்கிறார் என்று பூசாரி கேட்க பயம் தொற்றிக் கொண்டது பையனுக்கு.

மூன்றாவது முறையாகவும் பையனிடம் பூசாரி கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்க அவன் பிடித்தான் ஓட்டம்.

வீட்டிற்கு வந்த பையன் தன் அம்மாவிடம் கூறினான் பயந்தபடி, அம்மா கடவுளை யாரோ திருடிவிட்டார்கள். நான்தான் திருடியிருப்பேன் என்று நினைத்து பூசாரி என்னிடம் கேட்கிறார். நான் சத்தியமா கடவுளை திருடவில்லை என்று கூறினானாம்.

ஹி ஹி ஹி

வெப்துனியாவைப் படிக்கவும்