க‌த்‌தியை ‌தீ‌ட்டாம‌ல் பு‌த்‌தியை‌த் ‌தீ‌ட்டு‌ங்க‌ள்

வியாழன், 23 ஜூலை 2009 (17:02 IST)
வாசு‌கி‌ப் பா‌ட்டி‌யி‌ன் இ‌ந்த வார‌க் கதை இதுதா‌ன்.

சிவா ஒரு நல்ல உழைப்பாளி, மரம் வெட்டும் தொழிலை க‌ற்று அத‌ன் மூல‌ம் பிழைப்பு நடத்தி வந்தான். அந்த ஊர் மரப்பட்டறை வைத்திருக்கும் வேலு‌விட‌ம் வேலைக்கு சேர்ந்தான்.

வெட்டுவதற்காகவே வளர்க்கப்பட்ட தனது சவுக்குத் தோப்பில ‌சிவாவை மரம் வெட்ட வேலைக்கு அனுப்பி வைத்தார் வேலு.

அங்கு மிக கடுமையாக உழைத்து தன் முழுத் திறமையையும் காட்டி மரம் வெட்டலானான். முதல் நாள் 50 மர‌ங்களை வெட்டினான், இரண்டாவது நாள் 45 மரங்களை வெட்டினான், மூன்றாம் நாள் மிக கடுமையாக உழைத்தும் 30 மரங்களே வெட்ட முடிந்தது.

ஒரு நா‌ள் மாலை‌யி‌ல் 25 மர‌ங்களை ம‌ட்டுமே வெ‌ட்டிய ‌சிவா, மிகவும் களைத்துப் போய் தன் மரம் வெட்டும் திறன் நாளு‌க்கு நா‌ள் குறைந்து வருவதாக தன் முதலாளியிடம் தெரிவித்தான்.

அவரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ‌சிவா உன்னுடைய திறமை, உழைப்பின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இ‌ந்த தொ‌ய்வு உ‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்டது அ‌ல்ல எ‌ன்று கூ‌றினா‌ர்.

கடைசியாக உன் கோடாலியை எப்போது சாணம் (கூர் தீட்டினாய்) பிடித்தாய் என்று கேட்டார். அத‌ற்கு ‌சிவாவோ, ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும் என்று சொன்னான். முதலாவதாக உன் கோடாலியை தீட்டு பின் மரம் வெட்டப் போ என்று கூறினார்.

சிவா உ‌ற்சாகமாக தனது கோடா‌லியை கூ‌‌ர்மையா‌க்‌கி, அன்று நிறைய மரங்களை வெட்டி தன் முழு உழைப்பையும் காட்டினான். அவ‌ன் பு‌த்‌திசா‌லி‌த்தன‌மி‌ன்‌றி செய‌ல்ப‌ட்டதா‌ல் ஏ‌ற்ப‌ட்ட தொ‌ய்வுதா‌ன் இது.

இதனால் குழ‌ந்தைகளே உ‌ங்களு‌க்கு எ‌ன்ன பு‌ரி‌கிறது, க‌த்‌தியை‌த் ‌தீ‌ட்டாம‌ல், பு‌த்‌தியை‌த் ‌தீ‌ட்ட வே‌ண்டு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்