குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை முக்கியம் தான் என்றாலும் கூட, மசாஜ் செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்களும் முக்கியமே. ஏதோ ஒரு எண்ணெய்யையோ அல்லது க்ரீமையோ உங்கள் குழந்தையின் சருமத்தில் பயன்படுத்த முடியாது.
ஆலிவ் எண்ணெய்:
குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தும் புகழ் பெற்ற எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெய்யும் ஒன்றாகும். குழந்தையின் சருமத்தில் சொறி, சிரங்கு, வெட்டு, மற்றும் இதர அலர்ஜிகள் இல்லாமல் இருந்தால் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது பாதுகாப்பானது.