திரை வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று ஸ்டார் நடிகராக புகழ் பெற்றிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், அண்ணன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், மழை, தாம் தூம், எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.