Place of birth : Chennai Tamil Nadu
School: பத்ம சேஷாத்ரி பாலா பவன், கோயம்பத்தூர் & செயின்ட் பேட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி,சென்னை.
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னை நங்கநல்லூரில் வசித்து வருகிறார்.
நேருக்கு நேர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999),[7] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999) , பிதாமகன்( 2001), காக்க காக்க, வாரணம் ஆயிரம் , அயன் , கஜினி இப்படி பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது. அத்துடன் பேரழகன் படத்திற்காக 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். நடிப்பில் மட்டுமின்றி இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் , பசங்க 2 , ஜாக்பாட், எனும் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கினார்.