மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறும்: சபாநாயகர் தகவல்

திங்கள், 29 பிப்ரவரி 2016 (13:50 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நாளை நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.


 

 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
 
இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி  2016-17 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலையறிக்கையை தாக்கல் செய்தார்.
 
இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், அவ்வாறு உயர்த்தவதற்கு வாய்ப்பில்லை என்று பட்ஜெட்டிற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை உணர்த்தியது.
 
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
 
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள 2.5 லட்சம் என்பது தொடர்ந்து நீடிக்கின்றது.
 
நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, இந்த பாட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறும் என்று அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்