இவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக திடீரென இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் அவர்களின் தற்கொலை செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சியுடன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது